பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருந்தது.
18 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தின் 2-ஆம் பாகம், தற்போது ராகவா லாரன்ஸை வைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பி.வாசு, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சந்திரமுகி 2-ஆம் பாகத்தில் ரஜினிகாந்த் தான் நடிக்க இருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அவரால் நடிக்க முடியாமல் போனது என்று கூறினார்.
மற்றபடி ரஜினிக்கு இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை என்று சிலர் கூறுவது வதந்தியே என்று பி.வாசு தெரிவித்துள்ளார்.