டாட் பால் போட்ட இடத்தில் மரக்கன்றுகள்! ஏன் இந்த மாற்றம்! பிசிசிஐ எடுத்த சூப்பர் முடிவு! இதுதான் காரணமா?

2023-ஆம் ஆண்டின், ஐ.பி.எல் போட்டிகள், தற்போது நடந்து வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில், முதல் இரண்டு இடத்தில் இருந்த சென்னை அணியும், குஜராத் அணியும், முதல் தகுதிப் போட்டியில் பலப் பரீட்சை நடத்தின. இதில், 15 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை அணி வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இதேபோல், நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில், லக்னோ அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று, இரண்டாவது தகுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த இரண்டு போட்டிகளிலும், ஒரு மாற்றம் நடந்திருப்பதை, ரசிகர்கள் பலரும் கவனித்திருப்பார்கள்.

அதாவது, பொதுவாக பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அவர்கள் வீசிய 6 பந்துகளிலும், என்னென்ன ரன்கள் அடிக்கப்பட்டது என்ற விவரம் காட்டப்படும். அப்படி காட்டப்படும்போது, டாட் பால் போடப்பட்டால், அந்த இடத்தில் வெறும் புள்ளிகள் மட்டுமே இடம்பெறும்.

ஆனால், சமீபத்தில் நடந்த முதல் தகுதிப் போட்டியிலும், நேற்று நடத்த எலிமினேட்டர் போட்டியிலும், டாட் பால் போடப்பட்ட இடத்தில், புள்ளிகளுக்கு பதில், மரக்கன்றுகள் காண்பிக்கப்பட்டன. இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தன. அந்த குழப்பத்திற்கு, தற்போது விடை கிடைத்துள்ளது.

அதாவது, டாடா நிறுவனமும், பிசிசிஐ நிறுவனமும் இணைந்து, புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளன. அது என்னவென்றால், ஒவ்வொரு டாட் பால் வீசும்போதும், இந்தியா முழுவதும் 500 மரக்கன்றுகள் நடுவதற்கான வேலைகள் தொடங்கப்படும். இதனால், முதல் தகுதிப் போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 34 டாட் பால்களுக்கு, 17 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டது. இதேபோல், எலிமினேட்டர் போட்டியில் வீசப்பட்ட 6 டாட் பால்களுக்கு, 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.