வணங்கான் ஏன் ட்ராப் ஆனது? உண்மை இதுதான்?

சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில், சமீபத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் வணங்கான். ஆனால், தொடங்கிய வேகத்திலேயே, இந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

படம் டிராப் ஆனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, வணங்கான் படத்தின் கதையை எடுப்பதில், பாலா குழப்பம் அடைந்துள்ளாராம்.

இதனால், படத்தின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்ட சூர்யாவிற்கு, பயம் வந்துள்ளதாம். எனவே, படத்தில் இருந்து சூர்யாவே, விலகிவிட்டாராம். அண்ணன் தம்பி போல் இருவரும் பழகி வந்தாலும், சினிமாவில் இதற்கெல்லாம் இடம் கிடையாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.