மனைவி மீது சந்தேகம்.. கேமரா பொருத்திய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் ஜேக் ஜென். 54 வயதாகும் இவர், மருத்துவராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து பல்வேறு உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர், இதுதொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அதில், அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஜேக், தன் மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார். அதன்படி, தன் வீட்டில் உள்ள சமையல் அறையில், மனைவிக்கு தெரியாமல், ரகசிய கேமராவை வைத்துள்ளார்.

அதில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை பார்த்தபோது, ஜேக் ஜென் குடிக்கும் தேநீரில், 3 முறை அவரது மனைவி விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜேக்கின் தகவலின்பேரில், அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர், மனைவியை கைது செய்தனர்.

இதுதொடர்பாக, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான அவரது மனைவி, “எறும்புகளை கொல்வதற்காக தான் தேநீரில் விஷம் வைத்தேன். என் கணவரை கொல்வதற்காக அல்ல” என்று கூறியுள்ளார். தற்போது, அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News