சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்கேர் மாவட்டத்தின் இங்க்ரா கிராமத்தில் நந்து ராம் யாதவ் (32), தனது மனைவி சுக்னி(28) மற்றும் குழந்தையுடன் வசித்துவருகிறார்.
கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்தில் உரம் தெளிப்பதற்காக நந்து சென்றிருந்தார். அப்போது, திடீரென அவரை கழுதைப்புலி கூட்டம் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கியது.
நந்துவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவி சுக்னி, அருகில் இருந்த கட்டையால் கழுதைப்புலிகளை தாக்கியுள்ளார். இதில் கழுதைப்புலி ஒன்று உயிரிழந்த நிலையில் மற்றவை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
படுகாயமடைந்த நந்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கணவனை காப்பாற்றுவதற்காக கழுதைப்புலிகளுடன் சண்டையிட்ட சுக்னியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.