உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் தரேந்திர குஷ்வாஹா. இவர், தனது மனைவி மாயா, ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவி பெயரில், புதிய வீடு ஒன்றை தரேந்திரா கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதனால், வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, தனது உறவினர் மவுரியாவிடம் கொடுத்துள்ளார். இதற்கான பணியில் ஈடுபட்டு வந்தபோது, மவுரியாவுக்கும், மாயாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இருவரும் உல்லாசமாக இருந்தபோது, தரேந்திரா அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவரை தாக்கிய 2 பேரும், வீட்டில் இருந்த பணம், நகையை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், தரேந்திரா இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு மாயாவும், அவரது காதலன் மவுரியாவும் வந்து, தரேந்திராவையும், அவரது தாயாரையும் தாக்கியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால், மீரட்டில் நடைபெற்ற குற்றச் சம்பவத்தை போல, உன்னையும் கொன்று ட்ரம்மில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, மாயா பேசும்போது, தனது கணவன் கூறுவது அனைத்தும் பொய் என்றும், 4 முறை அவர் என்னை கட்டாயப்படுத்தி, கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்றும் கூறியுள்ளார். இந்த 2 பேரின் புகாரையும் ஏற்றுக் கொண்டுள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.