உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பந்திகேரா பகுதியை சேர்ந்தவர் அன்ஷூ. இவரும், ஈஷா நயீமா என்ற பெண்ணும், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி அன்று, நவாரத்திர விழாவை, இந்த தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.
ஆனால், அப்போது, தனக்கு அசைவ உணவு வேண்டும் என்று, நயீமா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதற்கு அன்ஷூ மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த அவர், தனது மனைவியை வெட்டி படுகொலை செய்தார்.
இதையடுத்து, மனைவியின் உடலை எடுத்து, அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளார். இதுமட்டுமின்றி, அந்த உடல் சீக்கிரம் அழுகிவிட வேண்டும் என்பதற்காக, உப்பு தூள்களையும் கிணற்றில் வீசிவிட்டு, அங்கிருந்து கச்சிதமாக தப்பிச் சென்றுள்ளார்.
ஆனால், அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உண்மை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அன்ஷூவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.