கள்ளத்தொடர்பில் ஒப்பந்தம் போட்ட கணவன்-மனைவி! இறுதியில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 19-ஆம் தேதி அன்று, ஜெகதாம்பாள் நகர் அருகே, படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தேவராஜின் மனைவி சரண்யாவிடம், விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சரண்யாவுக்கும், தேவராஜின் தொழில்முறை நண்பர் விமல்குமார் என்பவருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதால், தேவராஜின் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்து, கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஏற்பட்ட தகராறின் காரணமாக, அதே பகுதியில் உள்ள வேறொரு குடியிருப்பில், இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர். அந்த இடத்தில் இருவரும் வசித்து வந்த நிலையில், வேறொரு பெண்ணுடன் தேவராஜிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது மனைவி சரண்யா தட்டிக்கேட்டதற்கு, “உன்னை நான் கண்டு கொள்ளவில்லை. என்னை நீ கண்டுகொள்ள வேண்டாம்.,” என்று தேவராஜ் கூறியுள்ளாராம்.

இதனை தனக்கு கிடைத்த லைசென்ஸாக எண்ணிய சரண்யா, விமல் குமாரை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனை பார்த்து கடும் கோபம் அடைந்த தேவராஜ், மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால், கணவனை கொன்றுவிட்டு, அவர் பெயரில் போடப்பட்டுள்ள இன்சூரன்ஸ் பணம் 10 லட்சத்தை எடுத்துக்கொள்வதற்கு, சரண்யா திட்டம் தீட்டியுள்ளார்.

பின்னர், கூலிப்படை தயார் செய்யப்பட்டு, தேவராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தேவராஜின் உடல் இருந்தபோது, அவரது மனைவி சரண்யா கதறி அழுது மயக்கம் வருவது போல் நடித்து நாடகம் ஆடி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.