தூங்கிக் கொண்டிருந்த கணவன்.. துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெறித்த மனைவி.. இரவில் நடந்த கொடூரம்..

செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஜெகதீஸ்வரிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருக்கும் இடையே, கள்ளக்காதல் இருந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த விவேக், தனது மனைவியை அடிக்கடி கண்டித்துள்ளார். இருப்பினும், காதலை கைவிடாத ஜெகதீஸ்வரி, அதற்கு இடையூறாக இருந்த கணவனை, துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

பின்னர், தூங்கிக் கொண்டிருக்கும்போதே கணவர் உயிரிழந்துவிட்டார் என்று உறவினர்களிடம் நாடகமாடிய அவர், காவல்துறையின் விசாரணைக்கு பின், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, ஜெகதீஸ்வரியையும், அவரது காதலன் ஏகாம்பரத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்காதல் மோகத்தால், கணவர் கழுத்தை நெறித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.