உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த சிவாவுக்கும், மாதுரி என்பவருக்கும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, மாதுரிக்கு, வேறு சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
4 ஆண்களுடன் மனைவிக்கு கள்ளக்காதல் இருப்பதை அறிந்த சிவா, காதலை கைவிடும் படி கண்டித்துள்ளார். இருப்பினும், அவர் காதலை கைவிடாததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், கணவன் இருந்தால் காதலை தொடர முடியாத என்று நினைத்த மாதுரி, அதிரடி திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
அதாவது, மது விருந்து வைப்பதாக கூறி, மாதுரியின் காதலர்கள் அழைத்துள்ளனர். இதனை நம்பி சிவாவும் அவர்களுடன் சென்றுள்ளார். போதை தலைக்கு ஏறும் வரை குடித்த சிவாவை, அந்த 4 பேரும் சேர்ந்து அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை கண்டறிந்த சிவாவின் சகோதரர், காவல்துறையில் புகார் அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், மாதுரியையும், அவரது 4 காதலர்களையும் கைது செய்தனர்.