“கடன தரியா.. இல்லையா” – கணவன் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் நபர், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக, சாவ்தா என்ற நபரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை, இவரது மனைவி கடனாக வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தை செலுத்த முடியாதததால், வீட்டிற்கு வந்து சாவ்தா மிரட்டியுள்ளார்.

இருப்பினும், குடும்ப வறுமை காரணமாக, அவர்களால் பணத்தை செலுத்த முடியில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் அந்த பெண் தனியாக இருந்தபோது வந்த சாவ்தா, அவரை கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்.

இதனை வீடியோவாகவும் பதிவு செய்திருந்த அவர், அந்த பெண்ணின் கணவரிடம் காட்டி, பணத்தை விரைவில் தருமாறு மிரட்டியுள்ளார். இருப்பினும், பணம் தர முடியாததால், கணவன் இருக்கும்போது வீட்டிற்கு வந்த சாவ்தா, கணவன் கண்முன்னே, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக பல நாட்கள் அட்டூழியம் செய்தததால், தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர், அந்த பெண்ணை கீழ்த்தரமாக பேசியுள்ளனர். இறுதியில் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு, சாவ்தா மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு, சாவ்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.