உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரேம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித் ஹுசைன். இவரது மனைவி நூர் பானோ.
கடந்த வெள்ளிக்கிழமை ஹுசைன், சந்தையில் இருந்து பிரைடு சிக்கன் வாங்குவதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரம் கழித்து மனைவி நூர் பானோ வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்துள்ளார். இருப்பினும் இருவருக்கும் தகராறு நீடித்து கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஹுசைன், கத்தரிக்கோலால் பானோவின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானோ உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.