தென் அமெரிக்க நாடான சிலியின் மலைப்பகுதியில் சனிக்கிழமை திடீரென காட்டுத்தீ பரவத்துவங்கியது.
அந்த பகுதியில் எப்போதையும் விட அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமாக வீசிய காற்று ஆகிய காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மீட்புக் குழுவினர் திணறினர்.
தீயணைப்பு படையினர், 19 ஹெலிகாப்டர்களில் சென்று போராடி தீயை அணைத்து வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 123 பேர் கருகி பலியாகியுள்ளனர்.
மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும், காட்சித் தீயில் காயமடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.