கே.ஜி.எப் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம், பேன் இந்தியா இயக்குநராக மாறியவர் பிரசாந்த் நீல்.
இந்த இரண்டு படங்களையும் பார்த்த நடிகர் அஜித்குமார், தன்னை இயக்குமாறு, பிரசாந்த் நீலிடம் கேட்டதாக, பல மாதங்களுக்கு முன்பு தகவல் ஒன்று வெளியானது.
மேலும், அந்த சமயத்தில், சலார் படத்தில் பிசியாக இருந்ததால், இந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று, பிரசாந்த் நீல் கூறியதாகவும், சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, கே.ஜி.எஃப் 3-ஆம் பாகத்தில், நடிகர் அஜித் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், அடுத்த பேன் இந்தியா நடிகராக அஜித் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.