பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார்.
தற்போது, வாழை என்ற படத்தின் பின்னணி பணிகளில், மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் ரஜினியின் 172-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கீரின் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் தொடங்குவதற்கு, இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.