திமுக அரசை டிஸ்மிஸ் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவேன் – சுப்பிரமணியன் சுவாமி

சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன. உச்சநீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என 262 பேர் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பதிவு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசினால், தமிழக அரசை ஆட்சியில் இருந்து நீக்கும் வேளைகளில் இறங்குவேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு அல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்பதை 1991ல் நிரூபித்தேன் என பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News