Connect with us

Raj News Tamil

பிரபல மாஸ் நடிகரின் படத்தில் ஒன்றாக நடிக்கும் ரஜினி – கமல்?

சினிமா

பிரபல மாஸ் நடிகரின் படத்தில் ஒன்றாக நடிக்கும் ரஜினி – கமல்?

1980-களின் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால், அது ரஜினியும், கமலும் தான்.

அவர்கள் இருவரும் இணைந்து, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், 16 வயதினிலே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் 42 வருடங்களுக்கு பிறகு, இணைந்து நடிக்க இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில், நடிகர் ரஜினியும், கமலும், அவர்களாவே சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்று, சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், இந்த திரைப்படம், பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி…

More in சினிமா

To Top