Connect with us

Raj News Tamil

கமலுடன் மீண்டும் இணையும் ரஜினி!

சினிமா

கமலுடன் மீண்டும் இணையும் ரஜினி!

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஷங்கரின் இந்தியன் 2 படத்தில், கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். இப்படம், வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ரிலீஸ்-க்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இசை வெளியீட்டு விழாவை, மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

எனவே, இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்துக்கு, படக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்களாம்.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு, மீண்டும் ரஜினியும், கமலும், ஒரே மேடையில் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top