சினிமா துறையை சேர்ந்தவர்கள் எந்தவொரு செயல்களை செய்தாலும், அது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய செய்தியாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக, பிரபலங்களின் விவாகரத்து செய்தி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாறு, தனுஷ்-ஐஸ்வர்யா, சமந்தா-நாக சைத்தன்யா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகிய பிரபலங்களின் விவாகரத்து, இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த அதிர்வுகளே நிற்காத நிலையில், தற்போது இன்னொரு பிரபல ஜோடி விவாகரத்து செய்ய இருப்பதாக, தகவல் பரவி வருகிறது. அதாவது, பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது மனைவி கரீணா கபூரின் பெயரை கையில் பச்சைக் குத்தியிருந்தார்.
ஆனால், சமீபத்திய புகைப்படத்தில், அந்த பெயரை, திரிசூலமாக மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இவர்கள் இரண்டு பேரும், விவாகரத்து செய்ய உள்ளார்களா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.