Connect with us

Raj News Tamil

தமிழில் உருவாகும் ஜேம்ஸ் பாண்ட் படம்.. இவர்தான் இயக்குநரா?

சினிமா

தமிழில் உருவாகும் ஜேம்ஸ் பாண்ட் படம்.. இவர்தான் இயக்குநரா?

நாட்டுக்கு எதிராக நடக்கும் சதித்திட்டங்களை முறியடிக்கும் கதாபாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட். இதனை மையமாக வைத்து, ஹாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இதுமாதிரியான கதையை, தமிழில் எடுக்க இருப்பதாக, பிரபல மாஸ் இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது, இயக்குநர் ஷங்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் அடுத்து 3 விதமான ஐடியாவை வைத்துள்ளேன்.

அந்த 3 ஐடியாக்களில் ஒன்று வரலாற்று கதையம்சம் கொண்டது. மற்றொன்று, ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான படம். இன்னொன்று, சயின்ஸ் பிக்ஷன் கதையை மையமாக கொண்டது என்று கூறியுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையை, ஷங்கர் எழுதியிருப்பதாக கூறியுள்ளது, ரசிகர்கள் பலரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது. இந்த கதையில், ஹீரோவாக யார் நடிப்பார் என்ற ஆவலும், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More in சினிமா

To Top