Connect with us

Raj News Tamil

விஜயின் 69-வது திரைப்படத்தை இயக்குவது இந்த இயக்குநரா?

சினிமா

விஜயின் 69-வது திரைப்படத்தை இயக்குவது இந்த இயக்குநரா?

நடிகர் விஜய் அரசியலில் குதித்திருப்பது தான், தமிழகத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக சென்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்று இந்த கட்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் கொள்கை, சின்னம், கொடி ஆகியவை குறித்து, பெருத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, விஜயின் 69-வது படம் தொடர்பான தகவல் ஒன்று, இணையத்தில் பரவி, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தி கோட் படத்தை முடித்துவிட்டு, அடுத்து இன்னொரு படத்தில் விஜய் நடிக்க உள்ளாராம்.

இதுதான் அவரது கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை யார் இயக்குவார்கள் என்று பெரும் போட்டியே நடந்து வருகிறது. இந்த போட்டியில், கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத், அட்லி மற்றும் வெற்றிமாறன் ஆகிய 4 இயக்குநர்கள் உள்ளனர்.

இதில், இயக்குநர் வெற்றிமாறன் தளபதி 69 படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம், நடப்பு அரசியலை பேசும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனை வைத்து பார்க்கும்போது, விடுதலை 2 படத்தை முடித்துவிட்டு, வாடிவாசலை இயக்காமல், விஜயின் படத்திற்கு வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top