Connect with us

Raj News Tamil

‘ஜெயிலர்’ டைட்டிலை விட்டுக்கொடுக்குமா படக்குழு..?

சினிமா

‘ஜெயிலர்’ டைட்டிலை விட்டுக்கொடுக்குமா படக்குழு..?

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் மலையாளத்திலும் சக்கீர் மடத்தில் என்பவரின் இயக்கத்தில் பீரியட் த்ரில்லர் படமான ஜெயிலரும் வெளியாக உள்ளது.

1940களில் பிரிட்ஷாரால் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை போராட்ட தலைவரின் கதையை மையமாக வைத்து மலையாள ஜெயிலர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமது படத்தின் பெயரை மாற்றினால், அது நன்றாக இருக்காது என்று படத்தின் இயக்குனரான சக்கீர் மடத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் ஒரே பெயரில் வெவ்வேறு படங்கள் வெளியானால் ரசிகர்கள் குழம்பி விடுவார்கள் என்பதால் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பெயரை மாற்றக்கோரி இவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

அதற்கு, ரஜினியின் ஜெயிலர் படத்தின் பெயரை மாற்ற முடியாது என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் வெவ்வேறு கதையம்சம் கொண்ட இரண்டு ஜெயிலர் படங்கள் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top