வடகிழக்கு பருவமழையை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நடிகர் விஜயின் தவெக மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது.
மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.