கை, கால் செயிழப்பு.. காமெடி நடிகருக்கு இப்படியொரு நிலையா?

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் வெங்கல் ராவ். அதன்பிறகு, காமெடியில் கவனம் செலுத்த துவங்கிய இவர், வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கை, கால் செயிழந்து போயுள்ளது என்றும், தனக்கு நடிகர் உதவி செய்யுங்கள் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பான பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், இவருக்காவது வடிவேலு உதவி செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு, பல விதமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News