நீண்ட விடாமுயற்சிக்கு பிறகு, நாளை மறுநாள் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவ்வாறு இருக்க, இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை உலகம் முழுவதும் 18 கோடி ரூபாயை இப்படம் ப்ரீ புக்கிங் மூலம் மட்டும் வசூலித்துள்ளது.
ஆனால், தி கோட் படம், ப்ரீ புக்கிங்கில் 18.9 கோடி ரூபாயை வசூலித்திருந்தது. இதனை வைத்து பார்க்கும்போது, தி கோட்டை காட்டிலும் விடாமுயற்சி குறைவாக தான் ப்ரீ புக்கிங்கில் வசூலித்திருக்கிறது. ஆனால், இன்னும் 2 நாட்கள் இருப்பதால், தி கோட் படத்தை விடாமுயற்சி முந்திவிடும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.