தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதன் மூலம் விஜய் அரசியலில் தன்னை முன்னெடுத்து செல்வதாக பல்வேறு தரப்பினர் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த நிர்வாகிகள், அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும் தன் கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என விஜய் கூறியதாக தெரிவித்தனர்.