Connect with us

Raj News Tamil

விஜயதாரணியின் எம்.எல்.ஏ பதவிக்கு ஆப்பா? காங்கிரஸின் அடுத்த Move!

தமிழகம்

விஜயதாரணியின் எம்.எல்.ஏ பதவிக்கு ஆப்பா? காங்கிரஸின் அடுத்த Move!

காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வருபவர் விஜயதாரணி. 3 முறை எம்.எல்.ஏ-ஆகவும் வெற்றி அடைந்த இவர், இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.

இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. எஸ். விஜயதரணி அவர்கள் இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு அனுப்பி உள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் திருமதி. எஸ். விஜயதரணி அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More in தமிழகம்

To Top