பிரபல கிரிக்கெட் வீரரின் காரை உடைத்த இளம்பெண்! செல்ஃபி-க்கு நோ சொன்னது குத்தமா? உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவர் பிரித்வி ஷா. இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு அன்று, உணவகம் ஒன்றிற்கு, தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சப்னா கில் என்ற பெண், பிரித்வி ஷாவிடம், செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த பிரித்வி ஷா, அந்த பெண்ணையும், அவரது நண்பர்களையும், உணவக ஊழியர்களிடம் சொல்லி அங்கிருந்து வெளியேற்றியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த சப்னா கில், வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட பிரித்வி ஷாவின் நண்பருடைய காரை, பேஸ்பால் பேட்டை வைத்து, அடித்து உடைத்துள்ளார்.

இகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சப்னா கில்லை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சப்னா கில், “பிரித்வி ஷா தான் என்னிடம் அத்துமீறினார்.. அவர் என்னை அடிக்க வந்தார்.. என் நண்பர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சப்னா கில்லின் வழக்கறிஞர் பேசும்போது, “பிரித்வி ஷா தான் சப்னா மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.. பிரித்வி ஷா-வின் கையில் ஒரு கட்டையும் இருந்துள்ளது.. பிரித்வி ஷா -வின் நண்பர்கள் தான், சப்னா கில்லின் நண்பர்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.. சப்னா தற்போது காவல்நிலையத்தில் இருக்கிறார். ஆனால், அவரை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.