விபச்சார அழகியிடம் சிக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள்..! 30-கோடி வரை மோசடி செய்த பகீர் சம்பவம்..!

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தை சேர்ந்தவர் 26-வயது இளம்பெண் அர்ச்சனா நாக். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர்,
கடந்த 2015-ஆம் ஆண்டு புவனேஸ்வர் பகுதிக்கு குடிபெயர்ந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் 2018-ல் அங்கிருந்து அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்த அர்ச்சனாவுக்கு ஜெகபந்து என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பழைய கார்களை வாங்கிவிற்கும் தொழில் செய்துவரும் ஜெகபந்துவுக்கு, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் நட்பு இருந்துள்ளதை அறிந்த அர்ச்சனா, இவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதற்கு முன்பு விபச்சார தொழிலும் செய்து வந்த அர்ச்சனா,
கணவர் ஜெகபந்துவின் நட்பு வட்டாரங்களை பாலியலில் ஈடுபட வைத்து, அவர்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர் இந்த வீடியோக்களை வைத்து, ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் உட்பட பல்வேறு விஐபி-களிடம், ப்ளாக்மெயில் செய்து அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார். 4-ஆண்டுகளில் 30-கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். சமீபத்தில் இவரிடம் சிக்கிய தயாரிப்பாளர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகிய நிலையில், ஒடிசாவை மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.