பெண் தீக்குளித்து தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி தாயுமன் தெருவில் வசித்து வரும் ஏழுமலை என்பவர் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியான லில்லி, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை, கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தனியாக இருந்த லில்லி தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றன