தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவருடைய நிலைமை மோசமானதையடுத்து அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.