மது போதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற நபர்

ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம் (வயது 32). மதுபோதைக்கு அடிமையான இவர் மதுகுடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த பிரேமராம் பைக்கில் தனது மனைவியின் கால்களை கட்டி தரதரவென இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேமராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News