Connect with us

Raj News Tamil

பிள்ளைகளை பிச்சை எடுக்கவைத்து ரூ. 2.5 லட்சம் சம்பாதித்த பெண்..!!

இந்தியா

பிள்ளைகளை பிச்சை எடுக்கவைத்து ரூ. 2.5 லட்சம் சம்பாதித்த பெண்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் இந்திரா பாய் (வயது 40). இவருக்கு திருமணமாகி 5 பிள்ளைகள் உள்ளன. இவர் தனது 3 பிள்ளைகளை இந்தூர் சாலையில் பிச்சையெடுக்க வைத்து 45 நாட்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

பிச்சையெடுத்து சம்பாதித்த பணத்தில் 1 லட்ச ரூபாயை இந்திரா பாய் தனது மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மீதி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.

இது குறித்து பர்வேஷ் என்ற தனியார் தொண்டு நிறுவன தலைவி ரூபாலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பெயரில் இந்திரா பாயுடன் சேர்ந்து பிச்சையெடுத்த அவரின் 9 மற்றும் 10 வயதான 2 மகன்களையும் பிடிக்க முற்பட்டபோது அந்த சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இதையடுத்து, குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த இந்திரா பாயை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top