ஹோட்டல் பணிப்பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்படிருப்பதாக தாஜ்கஞ்ச் போலீசாருக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பெண் உள்பட 5 பேரை கைது போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆக்ரா போலீஸார் கூறுகையில், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததாகவும், தலையில் கண்ணாடி பாட்டிலை கொண்டு தாக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News