விழிப்புணர்வு ஏற்படுத்த முகத்தில் தாடி வளர்த்த பெண்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிம்ஹாங்ஷயர் பகுதியில் வசித்து வருபவர் அனெட். 48 வயதாகும் இவர், பாலிசிஸ்டிக் ஓவரே குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதாலும், ஆணுக்கான ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதாலும், பாலிசிஸ்டிக் ஓவரே என்ற குறைபாடு ஏற்படும்.

இதன்காரணமாக, முகம், மார்பகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே, பெண்களுக்கும் முடி வளரும். இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த இவர், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, தனது முகத்தில் வளரும் முடியை ஷேவிங் செய்யாமல் அப்படியே விட்டுள்ளார்.

பின்னர், முடி நன்றாக வளர்ந்த பிறகு, அதனை ஷேவிங் செய்து, அதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், பாலிசிஸ்டிக் ஓவரே குறைபாடு குறித்தும் அந்த பதிவில் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம், 2 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி திரட்டிய அவர், England PCOS என்ற அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News