ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மேல்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று சங்கரின் மனைவி ரேணுகாவும், அவரது இரண்டு குழந்தைகளும், கிணற்றில் சடலமாக கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 3 சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், பணம் தொடர்பாக ரேணுகாவிற்கும், சங்கரின் தாய்க்கும் பிரச்சனை ஏற்பட்டிருப்பதும், இந்த பிரச்சனையின் காரணமாக தான், அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்பதும், தெரியவந்தது.
முதலில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும், கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்த ரேணுகா, பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.