நண்பர்களுடன் தினமும் கடலை.. கண்டித்த கணவன்.. குழந்தைகளை கொன்ற இளம்பெண்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு, ராமுத்தாய் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். செல்போனில் அதிக மோகம் கொண்ட ராமுத்தாய், எப்போதும், தனது நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனால், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்றும், செல்போனில் பேசியது தொடர்பாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், முத்துக்குமார் தனது மனைவியின் செல்போனை, தரையில் போட்டு உடைத்துள்ளார்.

இதனால், கடந்த இரண்டு நாட்களாக, கடும் மன உளைச்சலில், ராமுத்தாய் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன், அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அவர், குழந்தைகள் இரண்டு பேரையும் கிணற்றில் வீசி, கொலை செய்துள்ளார். பின்னர், தானும் அதே கிணற்றில் குதித்து, தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குடும்ப தகராறில், குழந்தைகளை கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.