கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் இன்று காலை பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் படுக எங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் வழியாக பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து முனிராஜ் என்பவர் இயக்கி வந்தார். கெலமங்கலம் பகுதியில் உள்ள நான்கு வழி சாலை சந்திப்பில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த ஜக்கேரி கிராமத்தைச் சேர்ந்த யசோதமா (45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இதில் பயணித்த சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளில் மூன்று பேருக்கு மட்டும் படுக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த யசோதமாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தளி சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரன் மேலும் இடர்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு பத்திரமாக வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.