எல்லோரும் சில நேரங்களில் தவறுதலாக ஒரு பொருளுக்கு பதில், வேறொரு பொருளை பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால், ஒரு பெண், அவ்வாறு தவறுதலாக நினைத்த சம்பவம், தற்போது வைரலாகியுள்ளது.
அதாவது, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், விலங்குகள் நல ஆர்வலராக இருந்துள்ளார். இவர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, சாலையில் நோய்வாய்ப்பட்ட முள்ளம்பன்றி குட்டியை பார்த்துள்ளார்.
இதனால், அவற்றை அங்கிருந்து மீட்டு, ஒரு பெட்டியின் உள்ளே வைத்த அவர், தன்னிடம் இருந்து பூனைகளுக்கான உணவை வழங்கியுள்ளார். ஆனால், அது அன்று இரவு முழுவதும் எந்தவொரு அசைவும் இல்லாமல், அப்படியே கிடந்துள்ளது.
இதனைப் பார்த்து கவலை அடைந்த அந்த மூதாட்டி, அருகில் இருந்து விலங்குகளுக்கான மருத்துவமனைக்கு, அந்த முள்ளம்பன்றி குட்டியை அழைத்து சென்றுள்ளார். அங்கு, ஜேனத் கோட்சே என்ற மருத்துவர், அந்த முள்ளம்பன்றிக்கு, சிகிச்சை அளிக்க முயன்றுள்ளார்.
ஆனால், அதன்பிறகே, அது முள்ளம்பன்றி குட்டி அல்ல என்பதும், அது குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் தொப்பி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த செய்தியை, அந்த முதிய பெண்ணிடம், மருத்துவர் ஜேனத் கோட்சே கூறியுள்ளார். இதுதொடர்பான செய்தி, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.