குழந்தைகள் பற்கள் இல்லாமல் தான் பிறக்கின்றன. அந்த குழந்தை வளரும்போது, அதன் பால்பற்கள் வளர தொடங்கும். பின்னர், அந்த பால்பற்கள் கொட்டிய பிறகு, உண்மையான வலிமையான பற்கள் வளரும்.
இதுதான் பற்கள் வளரும் பொதுவான நிலை. ஒரு வளர்ச்சி அடைந்த முழு மனிதனுக்கு 32 பற்கள் வரை இருக்கும். இது, அவர்களது 21 வயதுக்குள் வளர்ந்துவிடும். சூழல் இவ்வாறு இருக்க, இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தனது குழந்தைக்கு பிறக்கும்போதே, 32 பற்களும் இருந்தது என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இந்த வீடியோவை வெளியிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், அதிர்ச்சியுடனும், கவலையுடனும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள சில மருத்துவர்கள், அந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ள மருத்துவ பிரச்சனை குறித்து பேசியுள்ளனர்.
அதாவது, Natal Teeth என்ற மருத்துவ நிலை தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்ட குழந்தைகளுக்கு, பிறக்கும்போதே 32 பற்களும் இருக்கும். இவ்வாறு பற்கள் இருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால், இந்த குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கடுமையான வலிக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. மேலும், அந்த குழந்தையின் பற்கள் உடைந்து, அதனை குழந்தையே விழுங்கும் அபாயமும், நாக்கை கடித்துக் கொள்ளும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி, அது குழந்தைக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
View this post on Instagram