திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில், தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கனித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் தேவி. 43 வயதாகும் இவர், சித்திரப்பட்டி பகுதியில், டியூஷன் சென்டர் ஒன்றையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இந்த டியூஷன் சென்டரில் படித்து வந்த மாணவனின் பெற்றோர், காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், டியூஷன் சென்டரில் படித்து வந்த எங்களுடைய 16 வயது மகனுக்கு, தேவி பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், போக்சோ வழக்கு பதிவு செய்து, தேவியை கைது செய்தனர்.
தன்னிடம் பாடம் கற்க வந்த மாணவனுக்கு, ஆசிரியை பாலியல் வன்கொடுமை தந்த சம்பவம், அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.