மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர், அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவருக்கு மகன், மகள் மற்றும் பேரன் பேத்திகள் உள்ளனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக, இளம்வயதில் வீட்டு வேலைசெய்து வந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். வேலை பார்க்கும் இடத்தில தரக்கூடிய உணவுகளை வீட்டுக்கு எடுத்து வந்து பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவார். வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.