சேலை அணிந்து வெர்க் அவுட்.. அசத்திய இளம்பெண்.. வைரலாகும் வீடியோ.. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை..

உடலை வலிமையாக வைத்துக் கொள்வது என்பது இன்றியமையாத ஒன்றாகும். உடல் பலமாக இருக்கும்போது, மனமும் அவ்வாறே இருக்கும் என்று கூறுவது வழக்கம். ஆண்களைப் போன்று தற்போது பெண்களும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரீனா சிங் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளஞ்சிவப்பு நிற சேலையை அணிந்துள்ள ரீனா சிங், மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை மிகவும் எளிதான முறையில் செய்து அசத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஆச்சரியத்துடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஒருசிலர், இதுமாதிரியான சேலையை அணிந்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வது ஆபத்தான விஷயம் என்றும், இது பலருக்கு தவறான முன்னுதாரணமாக மாறலாம் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News