மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
இதில் 56 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பல பெண்கள் தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி உடையவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
உரிமைத் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, உரிமைத் தொகை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை அக்டோபர் 18-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.