மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்!

9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (அக்.03) தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் குரூப் ‘ஏ’-விலும், வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை குரூப் ‘பி’ -யிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் வங்கதேசம் -ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்- இலங்கை அணிகள் ஷார்ஜாவில் மோதுகின்றன.

இந்தியா அணியின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (அக்.04) நியூஸிலாந்தை எதிர் கொள்கிறது. மேலும், இறுதி ஆட்டம் துபையில் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

Recent News