“இது கடவுளின் வேலை.. 16 வருடங்களாக எதுவுமே சாப்பிடல..” – ஆச்சரியப்படுத்தும் பெண்!

நாம் உயிர் வாழ வேண்டும் என்றால், உணவு, தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த இரண்டும் சில நாட்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றாலே, நமது உடல்நலம் பாதிக்கப்பட்டுவிடும்.

அவ்வாறு இருக்க, இளம்பெண் ஒருவர், கடந்த 16 வருடங்களாக, உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல், உயிர் வாழ்ந்து வருகிறார். ஆம்… நீங்கள் படித்தது உண்மை தான்.. எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த முழுவொர்க் அம்பவ் என்ற 26 வயது பெண், தனது 10 வயதில் இருந்து எதுவுமே சாப்பிடாமல் உயிர் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அறிந்த அமெரிக்கா நாட்டை சேர்ந்த Vlogger ட்ரீவ் பின்ஸ்கி, எத்தியோப்பியாவிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு, அந்த பெண்ணை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.

மேலும், அந்த பெண் வசிக்கும் இடத்தை, வீடியோவாகவும் பதிவு செய்துக் கொண்டார். இதுகுறித்து பேசும்போது, “அம்பவ் வசிக்கும் அறையின் உள்ளே நுழைந்தது, வேறொரு உலகத்தின் உள்ளே வந்தது போல் இருந்தது.

சில போஸ்டர்கள் மற்றும் பழங்கால பொருட்கள், அந்த அறையின் உள்ளே இருந்தது. அவை, அம்பவின் சிறுவயது டைம் கேப்ஸ்யூல்களில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தின” என்று கூறினார்.

இதையடுத்து, ட்ரீவ் பின்ஸ்கியிடம் பேசிய அம்பவ், “நான் என்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்தேன். அப்போது, காலை உணவை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல் என்று அவர்கள் என்னிடம் கூறுவார்கள்.

ஆனால், உணவை சாப்பிட்டுவிட்டேன் என்று கூறிவிட்டு, பாசாங்கு செய்வேன். எந்தவொரு உணவையும், தண்ணீரையும் குடிப்பதற்கான ஆசையை நான் இழந்துவிட்டேன்” என்று கூறினார்.

இவ்வாறு 10 வயதில் உணவு சாப்பிடுவதை தவிர்த்த அம்பவ், 16 ஆண்டுகளாக எதுவும் சாப்பிடாமல் இருந்து வருகிறாராம். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், அம்பவ்-க்கு, உணவு சமைப்பது பிடிக்குமாம். ஆனால், அவருக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மட்டும்தான் வராதாம்.

இவ்வாறு இருப்பது இயற்கைக்கு மாறான விஷயமாக இருப்பதால், சில மருத்துவர்கள் அந்த பெண்ணை இதற்கு முன் பரிசோதனை செய்துள்ளனர். பல வருடங்கள் பரிசோதனை செய்த பிறகு, அந்த பெண்ணின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது என்றும், அவர் உணவு, தண்ணீர் சாப்பிட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இவரது இந்த வினோதமான பழக்கத்தால், சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டிய தேவையும் அந்த பெண்ணுக்கு ஏற்படவில்லையாம்.

இந்த விநோதமான நிகழ்வு குறித்து விவரித்த அவர், “ இது கடவுளின் வேலை” என்று Cool -ஆக கூறியுள்ளார். மேலும், நான் திரும்பவும் நிச்சயமாக சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக கூறும் அவர், தனது இந்த நிலை குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்கள், தான் இருக்கும் இடத்திற்கு வந்து, தன்னுடன் தங்கலாம் என்று சவால் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News