உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது. இறுதி களத்தில் 12 பேரில் 3 இந்தியர்கள் இருந்ததால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் உற்றுநோக்கினர்.

எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்தார்.

மற்ற இந்தியர்களான கிஷோர் குமார் (84.77 மீட்டர்), டி.பி.மனு (84.14 மீ) முறையே 5 மற்றும் 6-வது இடங்களை பிடித்தனர்.

RELATED ARTICLES

Recent News