4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாடு, இந்த தொடரை ஏற்று நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், 2023-ஆம் ஆண்டிற்கான தொடரை, இந்திய நாடு ஏற்று நடத்தியிருந்தது. இதையடுத்து, மீண்டும் 2027-ஆம் ஆண்டு தான், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது.
அந்த வருடத்தில், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து, நடத்த உள்ளன. ஆப்ரிக்க கண்டத்தில், உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது, இது இரண்டாவது முறையாகும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இந்த போட்டியில் விளையாடுவது உறுதியாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால், நமீபியா நாடு, உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டும் தான், உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.