Connect with us

Raj News Tamil

இளையோர் உலக வில்வித்தை: தங்கம் வென்றார்கள் பிரியன்ஷ், அதிதி சுவாமி!

விளையாட்டு

இளையோர் உலக வில்வித்தை: தங்கம் வென்றார்கள் பிரியன்ஷ், அதிதி சுவாமி!

அயா்லாந்தில் நடைபெறும் இளையோர் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரியன்ஷ், அதிதி சுவாமி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

21 வயதுக்கு உள்பட ஆடவா் தனிநபா் காம்பவுண்ட் இறுதிச்சுற்றில் பிரியன்ஷ் 147-141 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பிரெங்கை வென்று முதலிடம் பிடித்தார். அதேபோல், 18 வயதுக்கு உள்பட்ட மகளிர் தனிநபா் காம்பவுண்ட் இறுதிச்சுற்றில் அதிதி சுவாமி 142-136 என்ற கணக்கில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை சாய்த்து பட்டத்தை தட்டிச் சென்றார்.

அதே பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் அவ்னீத் கௌர் – பிரிட்டனின் ஹாலி பௌல்டன் மோதினா். முடிவில் இருவரும் 138 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்க, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் ஆஃபில் பௌல்டன் 10-9 என்ற கணக்கில் வென்றார்.

இப்போட்டியில் இத்துடன் இந்தியா, 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்றுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top