பத்திரிகை சுதந்திரம் கொண்ட நாடுகள்…மோசமான இடத்தில் இந்தியா..!

1993ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மே 3ம் தேதியும் உலக நாடுகள் சபையால் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. யுனெஸ்கோ அறிக்கையின்படி கடந்த 2016 முதல் 2021 வரை 455 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ல் மட்டும் 86 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 22 கொலைகள் இந்தியாவில் நடந்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 363 பத்திரிகையாளர்களும், இந்தியாவில் மட்டும் 7 பத்திரிகையாளர்களும் தனது கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்திற்கு சென்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 11 வது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது.

இதே போல பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News